120,000 கிரேப்கார் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு; $16,000 அபராதம்

120,000 கிரேப்கார் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு; $16,000 அபராதம்

1 mins read
2862939f-03fc-458d-8705-4683c2e1ab89
படம்: கிரேப் -

விளம்பரத்துக்கான மின்னஞ்சல்கள் மூலம் க120,747 வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளியிட்டதற்காக கிரேப்கார் நிறுவனத்திற்கு $16,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின்போது தவறாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களால் ஒவ்வொருவருடைய விவரங்களும் வேறு ஒரு நபருக்குத் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி 399,751 வாடிக்கையாளர்களுக்கு விளம்பரச் செய்திகளை மின்னஞ்சல் மூலம் கிரேப்கார் அனுப்பியது. அவற்றில் 120,747 வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் வேறு பெயர்களும் தொலைபேசி எண்களும் தவறுதலாக அனுப்பப்பட்டிருந்தன.

எனினும் இச்சம்பவம் குறித்து அறிந்த பிறகு உடனேயே கிரேப்கார் சுயமாக அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உகந்த நடவடிக்கை எடுத்ததுடன் தனது செயல்முறைகளை மாற்றிக்கொண்டது.

இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: https://www.straitstimes.com/singapore/transport/grabcar-fined-16000-over-personal-data-breaches-in-marketing-e-mails