போலி தகவல்கள் கொடுத்து வங்கிக் கடன் பெற்ற மூவர் கைது

போலி தகவல்கள் கொடுத்து வங்கிக் கடன் பெற்ற மூவர் கைது

1 mins read
65f38322-aa05-46e9-b0c6-b9f1490d938c
இரண்டு கைத் தொலைபேசிகள், சில வங்கி சம்பந்தமான படுவங்கள், சில நகைகள், $1,750 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

வங்கிக் கடன் பெற போலி விண்ணப்பம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 27 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்ட இரு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி சம்பள சீட்டுகளுடன் பல்வேறு வங்கிக் கடன் விண்ணப்பங்களை ஒரு வங்கி கடந்த மாதம் பெற்றுள்ளதையடுத்து அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து 24 வயதுக்கும் 64 வயதுக்கும் உட்பட்ட மேலும் நான்கு ஆடவர்களும் இரு பெண்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர் என்று இன்று போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோவர் டெல்டா சாலையிலும் நியூ பிரிட்ஜ் சாலையிலும் அந்த மூவர் கடந்த திங்கட்கிழமை போலிஸ் படையின் வர்த்தக விவகாரப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கடன் விண்ணப்பங்களில் போலி சம்பள சீட்டுகளை சமர்ப்பித்து மொத்தம் $190,000 கடன் பெற முற்பட்டதாக கைதானவர்களில் ஒருவரான 40 வயது ஆடவர் மீது சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு கைத் தொலைபேசிகள், சில வங்கி சம்பந்தமான படுவங்கள், சில நகைகள், $1,750 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.