பெண் போல நடித்து பணத்தைக் கறந்த தேசிய சேவையாளருக்குச் சிறை

இணையத்தில் பாலியல் சேவை வழங்குவதாக விளம்பரப்படுத்தியதுடன் பெண் போல நடித்துப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி அவர்களிடமிருந்து தேசிய சேவை யாளரான ரம்லான் அபு $6,000 கறந்தார்.

மிரட்டிப் பணம் பறித்தது, மோசடி செய்தது, போதைப்பொருள் வைத்திருந்தது உட்பட 14 குற்றச் சாட்டுகளை ரம்லான், 24, நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு ஆறு ஆண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்ட னையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ரம்லான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவர் தண்ட னையை ஆற்றத் தொடங்கியயதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரம்லானுக்குத் தண்டனை விதிப்பதில் ஐம்பது வேறு குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.

இணையத்தில் பெண்களின் பெயரை வைத்துப் பாலியல் சேவைகளை விளம்பரித்தி வந்தார் ரம்லான். அச்சேவைகளைப் பெற விரும்பியோர், பெண்ணைத் தான் அழைக்கிறோம் என்று நினைத்து ரம்லானுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவர், அல்லது அவரை நேரடியாகக் கைபேசியில் அழைப்பர்.

கடந்த ஆண்டு மார்ச், அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமக்கு விருப்பத்தின் பேரில் அனுப்பப்பட்ட நிர்வாணப் படங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட குறைந்தது ஐவரை மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தைக் கறந்தார் ரம்லான். 

இச்செயல்களை அவர் பல்வேறு தருணங்களில் புரிந்தார். பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர், தங்களது நிர்வாணப் படங்களை ரம்லான் சொன்னபடி இணை யத்தில் வெளியிட்டுவிடுவாரோ என்ற பயத்தில் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தனர்.

அதே உத்தியைப் பயன்படுத்திய ரம்லான், கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதிக்கும் அக்டோபர் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 31 தருணங்களில் ஆடவர் ஒருவரிடமிருந்து $3,110 கறந்தார்.

பாதிக்கப்பட்ட அந்த நபர் போலிசிடம் புகார் அளித்ததை அடுத்து ரம்லான் கைது செய்யப் பட்டார்.

இந்த வழக்கைக் கடுமையானதாகக் கருதிய அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் சோவ் யிஹோங், இத்தகைய குற்றங் களைப் புரிய எண்ணம் கொண்டி ருக்கும் மற்றவர்களுக்கு எச்ச ரிக்கை விடுக்க ரம்லானுக்குக் கடுமையான தண்டனையை விதிக்குமாறு நீதிபதியைக் கேட்டுக்கொண்டார்.

நீதிமன்ற உத்தரவின் கார ணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்