சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு இவ்வாண்டு 2.1% ஆக குறையும்

சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டில் முன்பு குறிப்பிட்டதைவிட குறைவான வளர்ச்சிகாணும் என தனியார் துறை பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி 2.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது 2.1 விழுக்காடாக இருக்கும் என்று தனியார் துறை பொருளியலாளர்களிடம் மேற்கொண்ட கருத்தாய்வு முடிவு தெரிவிக்கிறது.

உற்பத்தி, நிதி, காப்புறுதி, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், தங்கும் விடுதிகள் மற்றும் உணவுச் சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் அவர்களது எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன.

உற்பத்தித் துறை கடந்த மார்ச் மாதத்தில் கணிக்கப்பட்ட 2 விழுக்காட்டு வளர்ச்சியிலிருந்து 0.2 விழுக்காடு சுருங்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுமானத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும் என்றும் அது 3.5 விழுக்காட்டை எட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. மார்ச் மாதத்தில், அந்த வளர்ச்சி 2.1 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

காலாண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிடும் முன்னுரைப்பு நேற்று வெளியானது. அதில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் பொருளியல் வளர்ச்சி 1.5 முதல் 2.5 விழுக்காட்டுக்குள் இருக்கும் என வர்த்தக, தொழில்துறை அமைச்சு கடந்த மாதம் குறிப்பிட்டது. முன்பு அது 1.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று கூறப்பட்டது.

வளர்ச்சி மெதுவடையும் என்று ஆணையம் கணித்ததை அடுத்து பொருளியல் வளர்ச்சியில் மந்தம் நிலவும் என பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

பொருளியல் மந்த நிலைக்கு வர்த்தக தன்னைப்பேணித்தனம் முக்கிய அக்கறையாக இருக்கும் என இந்தக் கருத்தாய்வில் பங்கேற்ற பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவின் பொருளியல் வளர்ச்சி இன்னும் மெதுவடைதலும் உலகப் பொருளியல் மந்தமும் அவர்களது அடுத் தடுத்த அக்கறைகளாக உள்ளன.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் பதற்றம் குறைந்தால் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி வலுவடையக்கூடும் என பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப சுழற்சியை வலுப்படுத்துவது, சீனாவின் வளர்ச்சி போன்றவையும் நிதி நிலையை மேம்படுத்தக்கூடும் என் பது அவர்களது கருத்து.

ஒட்டுமொத்த பணவீக்கம், முக்கிய பணவீக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளும் குறைந்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டு மொத்த பணவீக்கம் 1.1 விழுக்கா டாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டது. ஆனால், அது 0.9 விழுக் காடாக இருக்கும் என்று தற்போது கூறப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூரின் நாணய மதிப்பு சற்று குறைந்து $1.368 ஐ எட்டக்கூடும் என்றும் கருத்தாய்வில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 22 தனியார் துறைப் பொருளியலாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!