ஆசியாவின் வளர்ச்சியை நீடித்து நிலைத்திருக்கச் செய்ய சிங்கப்பூர் அளிக்கக்கூடிய வழி முறை குறித்து தற்காலிகப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பேசி இருக்கிறார்.
இயற்கைப் பேரிடர்களைச் சமாளித்து மீள்திறனை வளர்த்துக்கொள்வது அத்தகைய வழிகளில் ஒன்று என்று அவர் நேற்று கூறினார்.
இயற்கைப் பேரிடர்களால் ஆசியப் பொருளியல்களுக்கு ஏற்படும் வருடாந்திர இழப்பு 2030ஆம் ஆண்டிற்குள் 160 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்று முன்னுரைக் கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
வேகமான வளர்ச்சியாலும் துரிதமான நகரமயமாதலாலும் ஆசிய நாடுகளின் பொதுச் சேவை, உள்கட்டமைப்பு, சுற்றுச் சூழல் ஆகியவற்றுக்கு அதிக நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதைத் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் நினைவுபடுத்தினார். ஆனால், அவற்றில் புதிய வாய்ப்புகளும் உள்ளன என்றார் அவர்.
குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப அம்சங்களில் செய்யப்படும் முதலீடு, நீடித்த வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு களைத் திறந்துவிடக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் வளா கத்தில் நடைபெற்ற உலகப் பொது முதலீட்டாளர் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய திரு ஹெங் இவ்வாறு கூறினார்.

