இணையத்தில் பொருள் வாங்கு பவர்களின் எண்ணிக்கை அதிக ரித்து வரும் அதே வேளையில், மின் வர்த்தக மோசடிகளும் அதிக ரித்த வண்ணம் உள்ளன.
2017ஆம் ஆண்டில் 1,907ஆக இருந்த மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 2,125ஆக அதிகரித்தது.
இந்த நிலையை எதிர்கொள்ள, சிங்கப்பூர் போலிஸ் படை கடந்த ஆண்டு நவம்பரில் மின் வர்த்தக மோசடி தடுப்பு அமலாக்க, ஒருங்கி ணைப்புக் குழுவை அமைத்தது.
அக்குழு அமைக்கப்பட்ட இரு மாதங்களிலேயே, அது இணைய வர்த்தக மோசடிகள் புரிந்த 26 பேரைக் கைது செய்தது. அத்துடன், 230க்கும் அதிகமான மோசடி சம்பவங்களுக்கு அது தீர்வு கண்டது.
குழு அமைக்கப்பட்ட முதல் இரு மாதங்களில் தலைசிறந்த பணியாற்றியதற்காக ஏழு உறுப்பி னர்கள் கொண்டுள்ள இந்தக் குழுவிற்கு போலிஸ் ஆணையர் ஹூங் வீ டெக் நேற்று பாராட்டு விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதை வென்றிருப்பது ஒரு மைல்கல் மட்டுமே தவிர, அது எதற்கும் ஒரு முடிவல்ல என்று குழுவில் இடம்பெறும் போலிஸ் உதவி சுப்பிரின்டென் டண்ட் ஜெகதீஷ்வரன் வடராஜன், 33, கூறினார்.
"ஒன்றைச் சாதித்த பிறகு நமக்கு விருது கிடைக்கும்போது அது ஒருவித ஆனந்தத்தைத் தருவ துடன் இன்னும் கடினமாக உழைக்க உந்துதல் கொடுக்கிறது," என்றார் அவர்.
மின் வர்த்தக மோசடிகளில் ஈடுபடும் சந்தேக பேர்வழிகளைப் பிடிப்பது கடினமாக இருப்பதைச் சுட்டிய அவர், இணையத்தில் பொருள் வாங்கும்போது கவனத் துடன் செயல்படுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

