உணவினால் பரவும் நோய்களைக் கையாள மரபணு தரவு சேமிப்பகம்

உணவினால் பரவும் நோய்களைக் கையாள மரபணு தரவு சேமிப்பகம்

2 mins read

உணவுமூலம் பரவும் தொற்றுநோய் களை அடையாளம் காணவும் தடுக்கவும் சமாளிக்கவும் உலக ளாவிய நுண்ணுயிரின் மரபணு (டிஎன்ஏ) தரவுச் சேமிப்பகத்தை நிபுணர்கள் உருவாக்கி வருகின் றனர். இதன்மூலம் உணவினால் ஏற்படும் தொற்றுநோய்கள் உட்பட பல்வேறு நோய்களைப் பரப்பும் நுண்ணுயிரின் மரபணுக்களை உலகெங்கும் உள்ள ஆய்வுக்கூடங் கள், மருந்தகங்களில் பெறமுடியும். உணவு நச்சினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிகள் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஒரு நேரத்தில் ஓர் உயிரின் மரபணு வரிசையைக் கண்டுபிடிக் கும் நடவடிக்கையில் முழு மரபணு வரிசை அறிய இது உதவும்.

ஒரு நோயாளி அல்லது உணவு அல்லது விலங்கில் இருக் கும் ஒவ்வொரு நுண்ணுயிரையும் அடையாளம் கண்டு, உலக தரவு டன் ஒப்பிட்டு வகைப்படுத்த உதவும்.

மேலும், நுண்ணுயிர்களால் ஏற்படும் அனைத்து நோய்களுக் குமான சிறந்த உலக கண்காணிப் பாகவும் இத்தகைய தரவுச் சேமிப் பகம் திகழ முடியும் என்று இதனை முன்னெடுப்பவர்கள் கூறுகின்றனர்.

நோய் கண்காணிப்பும் நோய் தொற்றை ஆய்வுசெய்வதும் இந்த முறையின்கீழ் புரட்சிகரமான மாற் றத்தைக் காணும் என்று டாக்டர் பீட்டர் பென் எம்பார்க் கூறினார். இவர். உலக சுகாதார நிறுவனத் தின் கீழ் செயல்படும் உணவுப் பாதுகாப்பு கிருமித்தொற்றால் ஏற் படும் நோய்கள் (விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவும் நோய்கள்) தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்

உலக நுண்ணுயிர் அடையாளம் காட்டி (ஜிஎம்ஐ) மாநாட்டின் 12வது கூட்டத்தில் இத்திட்டம் அறிவிக் கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம், உணவு, வேளாண் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட் பட உலகெங்குமுள்ள 250க்கும் அதிகமான அறிவியல் அறிஞர் களும் நிபுணர்களும் நேற்று சிங்கப்பூரில் நடந்த இந்தக் கூட்டத்தில் பஙகேற்று உணவு நச்சைக் கட்டுப்படுத்த புதிய வழிகள் குறித்து ஆராய்ந்தனர்.

சல்மோனிலா போன்ற உணவி னால் பரவும் நோய்கள் அதிகரித்து வரும் வேளையில் இத்திட்டம் பற்றி ஆராயப்படுகிறது. டிஎன்ஏ தரவுச் சேமிப்பகம் மருத்துவமனை கள், மருந்தகங்கள், விலங்கு ஆய்வுக்கூடங்கள் போன்றவை விலங்குகள், மனிதர்கள், உணவு தொடர்பான தொற்று நோய்களை அடையாளம் காணவும் கண் காணிக்கவும் உதவும்.