பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களுக்கான கடுமையான சட்டம் உடனே நடப்புக்கு வரும்

பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களுக்கான கடுமையான சட்டம் உடனே நடப்புக்கு வரும்

1 mins read
44bf1ee8-c752-4f45-900b-3ebfe8c51590
-

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்கள் புரிவோருக்கு விதிக்கப்படும் புதிய, கடுமையான சட்டங்கள் உடனே நடப்புக்கு வரும் என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபரிசீலனை குழு வழங்கிய பரிந்துரைகளை முழுமையாக பல்கலைக்கழகம் ஏற்பதாக இவ்வார தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவது, நீண்ட கால இடைநீக்கம் போன்ற கடுமையான சட்டங்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

புதிய ஒழுங்கு நடத்தை செயல்முறை அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒழுங்கு நடத்தை குழுவிற்கு முன்னால் நடக்கும் விசாரணையின்போது பாதிக்கப்பட்டோருக்கு அதிக இடம் கொடுக்கும் வகையில் அது அமையும்.

மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு இன்று பல்கலைக்கழக தலைவர் டான் எங் சாய் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் வெவ்வேறு பரிந்துரைகளை செயல்படுத்த பல்கலைக்கழகத்தின் நேர அட்டவணையை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.