முதல் காலாண்டில் பணிநீக்கம் அதிகரிப்பு

முதல் காலாண்டில் பணிநீக்கம் அதிகரிப்பு

1 mins read
7201bc7a-8e99-4826-bba8-259cc690725b
-

இவ்வாண்டின் முதல் காலாண்டில் பணிநீக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு உற்பத்தி இறக்கம் கண்டது முக்கிய காரணம் என்றும் மனிதவள அமைச்சு இன்று கூறியுள்ளது.

பெரும்பாலான மின்னியல் துறையில் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த ஊழியர்களை உற்பத்தி விகிதத்தின் இறக்கம் பாதித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சென்ற காலாண்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,230. அதற்கு முந்தைய காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,510 ஆக இருந்தது. ஓராண்டுக்கு முன்னர் இதே காலாண்டில் இருந்த எண்ணிக்கையை விடவும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் இடம்பெற்ற பணிநீக்க எண்ணிக்கை அதிகம் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.