முன்னோடி தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை முதியோருக்கு அடுத்த மாதம் மெடிசேவ் பணம் நிரப்பப்படும்

முன்னோடி தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை முதியோருக்கு அடுத்த மாதம் மெடிசேவ் பணம் நிரப்பப்படும்

1 mins read
798c8a4e-c0d6-4968-ac19-db09f9cd5e2f
-

முன்னோடி தலைமுறையையோ மெர்டேக்கா தலைமுறையையோ சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கு $200 முதல் $800 வரை மெடிசேவ் கணக்கில் அடுத்த மாதம் பணம் நிரப்பப்படும்.

இந்த ஆண்டின் மெடிசேவ் பணம் நிரப்பும் திட்டத்திற்கு $270 மில்லியன் ஆகும் என்று நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தோருக்கு முதன்முதலாக மெடிசேவ் பணம் நிரப்பப்படுகிறது.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து 1950லிருந்து 1959ஆம் ஆண்டுக்குள் பிறந்த சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கின்றன.

முதியோர்கள் துடிப்புடன் இருக்க ஊக்கமளிக்கும் வகையிலும் சுகாதார பராமரிப்புச் செலவுகளுக்கு அதிக உறுதியளிக்கும் வகையிலும் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்