அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத போனஸ்

அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத அரையாண்டு போனஸ் கிடைக்க விருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் நடுப் பகுதியில் வழங்கப்படும் அரை யாண்டு போனஸ் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சற்றுக் குறைவு.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போனஸ் ஜூலையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு போன சோடு $200 முதல் $300 வரை ஒருமுறை வழங்கப்படும் தொகையும் கிடைக்கும். இதில் கீழ்நிலை ஊழியர்களுக்கு அதிக தொகை கிடைக்கும்.

கடந்த ஆண்டு அரசு ஊழியர் களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் அரை மாத போனசும் $300 முதல் $500 வரையில் ஒருமுறை வழங்கப்படும் தொகையும் வழங் கப்பட்டது.

இவ்வாண்டின் முதல் காலாண் டில் எதிர்பார்த்ததைவிட குறை வான 1.2 விழுக்காடு வளர்ச்சி பதிவானதால் அரையாண்டு போனசும் குறைந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகப் பதற்றம், மின்னியல் பொருட்களின் உற்பத்தி குறைவு ஆகியவற்றுக்கு இடையே இவ்வாண்டு முழுவதும் பொருளியல் வளர்ச்சி 1.5% முதல் 2.5% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலாண்டுடன் ஒப் பிடுகையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் மொத்த வேலை வாய்ப்பு உயர்ந்திருந்த போதிலும் குடிமக்களின் வேலை வாய்ப்பு இன்மையும் வேலையிழப்பு விகிதமும் சற்றுக்கூடியது. 

இந்தப் பின்னணியில்தான் அரசாங்கம் அரையாண்டு போனசை வழங்குகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் பொதுச்சேவைப் பிரிவு தெரிவித் தது. மேலும் தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வருவதாக அறிக்கையில் பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon