கப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்

கடலில் மிதவையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு நிர்வாண மாக இருந்தவரை கப்பல் நெருங்கியபோது கப்பல் தலைவர் கோர்னலிஸ் பிலக், முதல் வகுப்பு அதிகாரி சிர்டான் பஸ்டான் ஆகிய இருவரும் அவர் இறந்து விட்டதாகவே நினைத்தனர்.

ஆனால் கடலில் உயிருக்குப் போராடிய ஜான் லோ வலது கையை அசைத்துக் காட்டியபோது இருவரும் அதிர்ந்துவிட்டனர்.

“அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்தோம். அவரது உடல் உப்பியிருந்தது. அவரது முகம் வெயிலில் வெந்து பிரவுன் நிறத்தில் இருந்தது. அவரது கைகளிலிருந்த தோல் உரிந்து வந்துவிட்டது. உடல் நடுங் கியது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கப்பல் தலைவர் பிலக், 61 தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி முக்குளிப்பில் ஈடுபடுவதற்காக மலேசியாவின் மெர்சிங்கிலிருந்து அதிவேகப் படகில் புறப்பட்ட திரு லோ தியோமான் தீவுக்கு அருகே வந்தார். 

அப்போது திடீரென சூறைக் காற்று வீசியதால் அவரது படகில் நீர் புகுந்தது. படகு முழுமையாக மூழ்குவதற்கு முன்பு ஒரே ஒரு மிதவையையும் தனது முதுகுப் பையையும் எடுக்கவே அவருக்கு நேரமிருந் தது.

அவரிடம் உணவோ குடிநீரோ இல்லை.

அந்த சமயத்தில் சீனாவின் நான்டோங்கிலிருந்து சிங்கப் பூருக்கு வந்த கப்பல் அவரை மீட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது.

மே 7ஆம் தேதி சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சைக்கு சேர்த்த னர்.

ஏழு நாள் சிகிச்சைக்குப் பிறகு மே 23ஆம் தேதி ஜான் லோ வீடு திரும்பினார்.