மாடிப்படியில் 12 வயது சிறுமி மானபங்கம்

மாடிப்படியில் 12 வயது சிறுமி மானபங்கம்

2 mins read

புகைப்படப் போட்டியில் பங்கேற்க உதவி தேவைப்படுவதாகக் கூறி 12 வயது சிறுமியை ஏமாற்றி மாடிப் படிக்கு வரவழைத்து மானபங்கப் படுத்திய பதின்ம வயதினரை 18 மாதம் நன்னடத்தைக் கண்காணிப் பின் கீழ் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது முழுநேர தேசிய சேவையாளராக இருக்கும் 18 வயது லெஸ்டர் ஓங் பெய் கோங் சில நிபந்தனைகளோடு மேற்பார்வையுடன் கூடிய நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார்.

இதனால் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி வரை அவர் வெளியே செல்ல முடியாது. மேலும் 120 மணி நேரம் அவர் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும்.

உளவியல் நிபுணரின் ஆலோ சனையை பெறவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் பெண்டிங் ரோடு புளோக் 233 மின்தூக்கி அருகே பள்ளியி லிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை ஓங் அணுகினார்.

புகைப்படப் போட்டிக்கு படம் தேவைப்படுவதாக் கூறி சிறுமியை அவர் புளோக்கில் 2வது மாடிக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியின் பின்புறத்தை அவர் தொட்டார். ஆனால் தவறுதலாகப் பட்டுவிட்டதாகக் கூறிய அவர் சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டார்.

பின்னர் பல கோணங்களில் சிறுமியை நிற்க வைப்பதற்காக சிறுமியின் கை, கால்களைத் தொட்டார்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறிப் போகவே சிறுமி ஓடிவிட்டார்.

வீட்டுக்குச் சென்றதும் பெற்றோரிடம் சிறுமி நடந்த சம்பவத்தைக் கூற காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓங் கைது செய்யப்பட்டார்.