உணவங்காடி நிலையங்களுக்கு மக்கள் பேராதரவு: ஆய்வு

ஈரச்சந்தைகளைவிட உணவங்காடி நிலையங்களுக்கு சிங்கப்பூரர்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர்.

தேசிய சுற்றுப்புற வாரியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

பத்தில் ஒன்பது பேர் அல்லது 91 விழுக்காட்டினர் உணவங்காடி நிலையங்கள் திருப்திகரமாகவும் மிகவும் திருப்திகரமாகவும் உள்ளது என்று கூறியுள்ளனர்.

கட்டுப்படியாகக்கூடிய விலை, உணவின் தரம், காற்றோட்டமான தூய்மையான சுற்றுச்சூழல் போன்றவற்தை அவர்கள் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் உள்ள முக்கிய வசதிகளில் ஒன்றாக உணவங்காடி நிலையங்களும் இருக்க வேண்டும் என்று         54% ஆய்வில் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 90% அல்லது அதற்கும் மேலானவர்கள் உணவங்காடி நிலையங்கள் மீது திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் அதே சமயத்தில் ஈரச்சந்தை மீதான ஆர்வம் குறைந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 39 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு ஈரச்சந்தைக்கே போகவில்லை என்று கூறினர்.