$150,000 மதிப்புள்ள ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரங்களுடன் ஓட்டம்; கேமராவில் சிக்கிய சந்தேக நபருக்கு வலைவீச்சு

ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் உள்ள பழைய பொருட்களை விற்கும் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், 150,000 வெள்ளி மதிப்புள்ள வைரம் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் கைக்கடிகாரங்களுடன் தப்பியோடி விட்டார்.

சென்ற புதன்கிழமை அன்று முதல் வாடிக்கையாளராக அவர் கடைக்குள் வந்தார் என்று ‘ஹெச்ஜே லக்சரி’ கடையின் ஊழியர் லியவ் கூறினார்.

ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை பார்க்க வேண்டும் என்று அந்த நபர் கூறியதும் கடையில் இருந்த லியவ், சில கைக்கடிகாரங்களைக் காட்டினார்.

“அப்போது சில கைக்கடிகாரங் களைப் போட்டுவிட்டு இரண்டு கைக்கடிகாரங்ளை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் ஓடி விட்டார். அவர் தனது வயதுக்கு மீறிய கைக்கடிகாரங்களைக் கேட்டபோதே சந்தேகம் எழுந்தது,” என்று லியவ் சொன்னார்.

அந்த சமயத்தில் கடையின் உரிமையாளர் ரஸல் டான் அங்கு இல்லை. லியவ், அவரை துரத்திக் கொண்டு ஓடினார். மற்ற கடைக் காரர்களும் சந்தேக நபரை துரத்தி னர். ஆனால் படிக்கட்டு வழியாக இறங்கி அவர் தப்பிவிட்டார்.

இருப்பினும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவாகியிருந்தது. அவரது கைரேகைகளும் கடையில் பல இடங்களில் பதிந்திருந்தன. இவை இரண்டையும் எடுத்துச் சென்றுள்ள போலிசார், சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!