சிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்

லிட்டில் இந்தியாவில் கடந்த ஆண்டு பட்டப்பகலில் சமுராய் வாள், கத்தியால்  தாக்கப்பட்ட சம் பவத்தில் ஈடுபட்ட 18 வயது இளையர் குற்றத்தை ஒப்புக்கொண் டார். ஐவர் கொண்ட கும்பல் தாக் கியதில் திரு தினேஸ் செல்வராஜா, 27, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

திரு தினேஸால் தற்போது சரி யாக நடக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தாக்கியவர்களில் ஒருவரான ஷர்வின் ராஜ் சுராஜ், 18, குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

பயங்கர ஆயுதத்துடன் கல வரத்தில் ஈடுபட்டது, சட்ட விரோதக் கும்பலில் இருந்தது, கையில் கத்தி வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து ஷர்வின் குற்ற வாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.  

கும்பலைச் சேர்ந்த மற்ற உறுப் பினர்களான ஹரேஷ் ஷண்முக நாதன், 23, அர்ஜுன் ரத்னவேலு, 24, விக்டர் அலெக்சாண்டர் ஆறு முகம், 25, தினேஷ்குமார் ருவி, 28, ஆகியோருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் சிராங்கூன் ரோடு பேருந்து நிறுத்துமிடத்தில் உள்ள இருக் கையில் திரு தினேஸ் அமர்ந்திருந் தார். 

அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த ஐவர் அவரை அடை யாளம் கண்டுபிடித்துத் தாக்கினர்.

நீதிமன்றத்தில் சம்பவத்தை விவரித்த அரசுத் தரப்பு வழக் கறிஞர் பவித்ரா, முன்பகை காரண மாக தினேஸ் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் தினேஸுக்கும் கும் பலுக்கும் இடையிலிருந்த முன் பகை பற்றி தெரிவிக்கப்படவில்லை.

“காரை ஓட்டிவந்த தினேஷ் குமார் சாலையோரமாக நிறுத்தி னார். பின்னர் ஐவரும் காரிலிருந்து இறங்கினர். 

“காரின் பின்பக்கத்தில் இருந்த பெட்டியிலிருந்து அர்ஜுன் வெட்டுக் கத்தியும் தினேஷ் குமார் சமுராய் வாளும் ஷர்வின் தடியும் எடுத்துக்கொண்டனர். 

“ஹரிஷ் தாங்கள் தேடி வந்த ஆளை உறுதி செய்ததும் மற்ற வர்கள் தாக்குவதற்குத் தயாரா கினர்.

“அர்ஜுன் முதலில் ஓடி அவரை வெட்டுக்கத்தியால் தாக்கினார். தினேஷ்குமார் உறையிலிருந்து சமுராய் வாளை எடுத்து அவரை வெட்டினார். ஷர்வின் தடியால் அவரை தாக்கினார். ஹரேஷ் அவரை எட்டி உதைத்துக் குத்தி னார்,” என்று வழக்கறிஞர் பவித்ரா சொன்னார்.

பின்னர் காரில் ஏறி ஐவரும்  சென்றுவிட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆம் புலன்ஸ் வாகனம் தினேஸை மீட்டு டான் டோக் செங் மருத்துவமனை யில் சேர்த்தது. 

வலதுகால் துண்டிக்கும் அளவுக்கு அவருக்கு காயம் ஏற் பட்டிருந்தது. அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய தினேஸ் மூன்று மாதகாலம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசார ணை நடத்திய காவல்துறையினர் ஐவரையும் 16 மணி நேரத்துக்குள் கைது செய்தனர்.

தற்போது ஐவரில் ஷர்வின் மட்டும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இன்னும் அவருக்குத் தண்டனை விதிக்கப் படவில்லை. ஷர்வின் இளையராக இருப்பதால் சீர்திருத்தப் பயிற் சிக்கு ஏற்றவரா என்பதை நிர்ண யிக்க அறிக்கை சமர்பிக்க உத்தர விட வேண்டும் என்று நீதிபதி மே மேசநெசை வழக்கறிஞர் பவித்ரா கேட்டுக்கொண்டார்.