கடன்முதலை தொந்தரவுக்காக  ஆடவர் ஒருவர் கைது

கடன்முதலை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 28 வயது ஆடவரை போலிஸ் கைது செய்துள்ளது. 

இம்மாதம் 13ஆம் தேதி, தோ பாயோ லோரோங் 7ல் உள்ள வீடு ஒன்றில் இரும்புக் கதவில் காப்பி ஊற்றப்பட்டு உள்ளது என்று போலிசுக்குத் தகவல் கிடைத்தது. போலிஸ் கேமராக்களின் காணொளியிலிருந்தும் தீவிர விசாரிப்புகளி லிருந்தும், தங்ளின் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்து அவரை இம்மா தம் 14ஆம் தேதி ஏர்லைன் ரோட்டில் கைது செய்தனர். 

அந்த ஆடவர் தீவு முழுவதிலும் பல்வேறு கடன்முதலை தொந்தரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது நேற்றுக் காலை அரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.