போதைப்பொருள், குடிநுழைவுக் குற்றங்களுக்காக 30 பேர் கைது

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் சிங்கப்பூர் போலிஸ் படையும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் (சிஎன்பி) கூட்டாக கடந்த திங்கட்கிழமை தொடங்கி, மூன்று நாட்கள் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (படம்).

உட்லண்ட்ஸ், ஈசூன், செம்பவாங் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் ஆண்கள், 25பேர் பெண்கள். அவர்கள் 16 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப் பட்டவர்கள்.

அவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்க ளுக்காக கைதானவர்களில் ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர். அவர்கள் 16 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். எஞ்சியுள்ள 26 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 20 பெண்கள் மாதர் சாசனம் மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் கைதாகினர். இது குறித்து போலிஸ் மற்றும் சிஎன்பி விசாரணையைத் தொடங்கியுள்ளன.