அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி

இவ்வாண்டு தேசிய தின அணி வகுப்பின் ஓர் அங்கமான அணி வகுப்பு மற்றும் சடங்குபூர்வ  நிகழ்வுகளில் 2,600க்கும் மேற் பட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அங்கத்துக்கு ‘மை பீப் பள்’ அதாவது நமது மக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மரியாதை காவல் அணிகள் உட்பட 38 அணிகள் அணிவகுத் துச் செல்லும். அவற்றில் சிங்கப் பூர் ஆயுதப்படை மற்றும் உள் துறைக் குழு அணிகள், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, மக்கள் கழக இளையர் இயக்கம் உட்பட 16 சமூக, பொருளியல் அணிகள் ஆகியவை உள்ளடங் கும்.

அணிவகுப்பு மற்றும் சடங்கு பூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டி னண்ட் கர்னல் லோ வூன் லியாங் நேற்று நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் கூட்டு ஒத் திகையின்போது இந்த விவரங் களை வெளியிட்டார்.

தொண்டூழியர் அணியைக் குறிப்பிட்டு பேசிய திரு லோ, “அவர்கள் நமது நாட்டைத் தற் காக்க கூடுதல் பங்களித்த பல் வேறு தலைமுறை சிங்கப்பூரர் களைப் பிரதிநிதிப்பார்கள்,” என் றார்.

அணிவகுப்பு அங்கத்தில் கூட்டு ‘ட்ரம்’ இசைக்குழுவும் முதல் முறையாகப் பங்கேற்கும். அதில் 24 பேர் ‘ட்ரம்’ இசைக்கரு வியை வாசிப்பார்கள்.

அவர்கள் சிங்கப்பூர் ஆயுதப் படை இசைக்குழு, சிங்கப்பூர் தேசிய மாணவர் படை, சிறப்புத் தேவையுடைய சங்கத்தின் தங் ளின் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

கடற்படை முக்குளிப்புப் பிரி வின் தலைவராக 44 வயது லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ வெங் குவாய் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் தளபதியாகச் செயல்படுவார்.

“இம்முறை நான் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறேன். அவர்களில் ஆகக் குறைந்த 13 வயது சிறுமியும் ஆக வயது முதிர்ந்த 71 வயது ஆடவரும் அடங்குவார்கள்,” என்றார் லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ.  

அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராக 43 வயது மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் செயலாற்றுவார்.