புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்

1 mins read
20e4c999-0324-4436-bcf8-0878561beb0a
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச் -

அங் மோ கியோவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் லீ சியன் லூங் மலாய் பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ்ந்தார். அங் மோ கியோ குழுத் தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதி ஆகியவற்றில் உள்ள சமூக மன்றங்களின் மலாய் நற்பணி செயற்குழுக்கள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

பண்பாடு என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 2,000 குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர். மலாய் கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வரும் குடியிருப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கை

களின்போதும் உணவு உட்கொள்ளும்போதும் புதிய தோழர்களைப் பழகிக்கொள்ளலாம் என்பது இவ்வாண்டு கொண்டாட்டத்தின் புதிய பாணி.

"மலாய் மக்கள் மட்டுமல்லாது எல்லா குடியிருப்பாளர்களும் பங்கேற்கும் வண்ணம் இவ்வாண்டு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினோம். அனைத்து இனங்களையும் சேர்ந்த குடியிருப்பாளர்களோடு இணைந்து கம்போங் உணர்வை மீண்டும் தோற்றுவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைத்தோம்," என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரான நூரியானி ஒஸ்மான்.