பிள்ளைகள் வெற்றி அடைய தந்தையரின் பங்கு முக்கியம்

பிள்ளைகள் வெற்றி அடைய தந்தையரின் பங்கு முக்கியம்

1 mins read
5657d631-b64f-4092-a833-d4b19b770855
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவருடன் அமைச்சர் இந்திராணி ராஜா கலந்துரையாடினார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிள்ளைகள் வாழ்வில் வெற்றிபெற தந்தையரின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் அலுவலக அமைச் சர் இந்திராணி ராஜா வலியுறுத் தியுள்ளார். பிள்ளைகளிடம் தந்தையர் காட்டும் அன்பு, அவர்களின் வாழ்க்கையில் பெற்றோர் காட்டும் ஆர்வம், கொடுக்கும் ஊக்கம் போன்றவை பிள்ளைகளின் எதிர் காலத்தை வெற்றிகரமானதாக் கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது கல்வி, நிதி அமைச்சருமான குமாரி இந்தி ராணி, தந்தையர் தினத்தை முன் னிட்டும் சிங்கப்பூரின் இருநூற் றாண்டு நிறைவை ஒட்டியும் நடந்த சமூக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். ஜூரோங் பறவைப் பூங்காவில் மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாட்டில் நேற்று நடந்த அந்த விழாவில் சன்லவ் இல்லவாசிகள் உட்பட பல இனங்களையும் சேர்ந்த 4,650 பேர் கலந்துகொண்டனர்.

பெற்றோர், பிள்ளைகளிடையே உறவையும் நல்வாழ்வையும் மேம் படுத்தும் நோக்கத்தில் ஏறத்தாழ 20 நடவடிக்கைகளும் கூடங்களும் அங்கு இடம்பெற்றன. பொதுமக்கள் பங்கேற்ற அறப் பணி நிதி திரட்டும் நடந்தது. நிதி திரட்டில் கலந்து கொண்டவர்கள் தாட்களைக்கொண்டு இதயம் போன்ற வடிவத்தை உருவாக்கி தாங்கள் படைத்த ஒவ்வொரு உருவத்துக்கும் 100 கிராம் என்ற கணக்கில் 2,000 கிலோ அரிசியை ஸ்ரீ சன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திட மிருந்து திரட்டினர்.