கனோபி பூங்கா வலையில் தடுமாறி மாது காயம்

கனோபி பூங்கா வலையில் தடுமாறி மாது காயம்

1 mins read
3c04e505-e9eb-4baa-9d71-7033b575af1c
ST PHOTO: KUA CHEE SIONG -

சாங்கி விமானநிலைய ஜூவல் வளாகத்தில் இருக்கும் கனோபி பூங்காவில் தொங்குவலையில் நடந்தபோது ஒரு மாது தடுமாறி விழுந்து காயமடைந்துவிட்டார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாக ஜூவல் வளாகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். இம்மாதம் 14ஆம் தேதி மாலை சுமார் 5.05 மணிக்கு வலையில் நடந்தபோது அந்த மாது தடுமாறி முன்புறமாக விழுந்தார். அங்கு இருந்த ஊழியர் உட னடியாக அவருக்கு முதலுதவி அளித்ததாகப் பேச்சாளர் கூறி னார்.

சம்பவம் குறித்து தாங்கள் வருந்துவதாகக் கூறிய அந்தப் பேச்சாளர், ஜூவல் வளா கத்தில் கேளிக்கைகளில் ஈடுபடும்போது கவனமாக நடந்துகொள்ளும்படி வருகை யாளர்களுக்கு ஆலோ சனை கூறினார். ஜூவல் வளாகத்தில் கனோபி பூங்கா சென்ற திங்கட்கிழமை பொது மக்களுக்குத் திறந்துவிடப் பட்டது.