சிங்கப்பூரில் பல்கலைக்கழக வளாகங்களில் இடம்பெறக்கூடிய பெரும்பாலான பாலியல் சம்பவங் கள் வெளியே தெரிவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. சிங்கப்பூரின் இரண்டு ஆகப் பெரிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளில் ஏறக் குறைய பாதி பேர் பல்கலைக்கழக வளாகத்தில் சட்டவிரோத பாலி யல் சம்பவங்களை அனுபவித்து இருக்கிறார்கள் என்று ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆய்வு தெரி விக்கிறது. பாலியல் நகைச்சுவைகள், குறுஞ்செய்திகள், பாலியல் தொடர்பான விளையாட்டுகள் போன்றவையே அத்தகைய சம் பவங்களில் அதிகம் என்றாலும் கடுமையான சம்பவங்களுக்கும் சிலர் இலக்கானதுண்டு.
இணையம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 1,000 பேர் கலந்துகொண்டனர். தாங்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளா னதாக ஆறு பேர் கூறினர். மான பங்கத்திற்கு இலக்கானதாக 50 பேர் தெரிவித்தனர். குளிக்கும் போது அல்லது வேறு இடங்களில் தாங்கள் ஆபாசமாகப் படம் எடுக் கப்பட்டதாக 20 பேர் கூறினர். ஆனால் அத்தகைய சம்பவங் களில் பெரும்பாலானவை பற்றி நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட வில்லை. பயம், களங்கம், சந் தேகம் போன்றவையே இவற்றுக் குக் காரணம் என்கிறது ஆய்வு. இந்த ஆய்வு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழ கம் இரண்டையும் சேர்ந்த 423 ஆண்கள், 580 பெண்களை உள் ளடக்கி நடத்தப்பட்டது.

