டாங் பிளாசாவில் சனிக்கிழமை இரவு நேரத்தில் தீ மூண்டதை அடுத்து சுமார் 200 பேர் அப்புறப்படுத்தப் பட்டார்கள். ஆர்ச்சர்ட் பகுதியில் இருக்கும் அந்தக் கட்டடத்தில் தீ மூண்டது பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு சனிக்கிழமை இரவு 8.40 மணிக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பகுதிவாரி கடையின் முதல் மாடியில் மின்சார இணைப்பில் தீ மூண்டதாக டாங் பிளாசா கூறியது. தீயணைப்பாளர்கள் சென்றதற்கு முன்பாகவே தீ அணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரியவந்தது. அந்தப் பகுதிவாரிக் கடை நேற்று வழக்கம்போல் செயல்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
டாங் பிளாசா தீ விபத்து
1 mins read
ST PHOTO: KEVIN LIM -

