பெண் கைதிகளில் 76% போதையர்

சிங்கப்பூரில் சிறையில் உள்ள பெண்களில் ஏறக்குறைய முக் கால்வாசிப்பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். தங் களுடைய அன்பர்கள் காரண மாக அவர்கள் அந்தப் பழக்கத் திற்கு ஆளாகி இருக்கிறார்கள். போதைப்புழங்கியாக இருக் கும் தங்கள் தோழரின் அங்கீ காரத்தைப் பெறுவதற்காக பெண் கள் அந்தக் காரியத்தைச் செய் வதாக போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கும் பெண் களுக்கு உதவும் ஆலோசகர் கள் கூறுகிறார்கள்.

பெண்களிடம் தங்ககளுக்கு அந்தரங்கமானவர்களின் செல் வாக்கு அதிகம் என்று சானா எனப்படும் சிங்கப்பூர் போதைப் பொருள் ஒழிப்புச் சங்கத்தைச் சேர்ந்த மனோவியல் வல்லுந ரான லோஷாந்தினி பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேலை, சக நண்பர்களின் நெருக்குதல் போன்ற பாதிப்பு களுக்கு ஆளாகும் ஆண்களைப் போலன்றி, பெண்களோ சொந்த காரணங்களின் பாதிப்புகளுக்கு ஆளாவது அதிகம் என்றார் அவர்.

போதைப்பொருளுக்கு அடி மையான தங்களுடைய அன்பர் களுடன் உறவு முறிந்திருந்தால் அதைச் சரிசெய்வதற்காக பெண்கள் போதைப்பொருளைத் தொடுகிறார்கள். கடைசியில் அவர்களும் அடிமையாகிவிடு கிறார்கள் என்று திருமதி பன்னீர்செல்வம் விளக்கினார். இருவரும் சேர்ந்து போதைப் பொருளைப் புழங்கினால் தங் களுக்கிடையில் நெருக்கம் அதி கரிக்கும் என்ற தவறான எண் ணம் அவர்களிடம் இருக்கிறது என்றார் அவர்.

2018ல் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 10,242. அவர் களில் 12% மட்டுமே பெண்கள். அந்தப் பெண்களில் 76% போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளாக இருக்கிறார் கள் என்று சிங்கப்பூர் சிறைச் சாலை சேவைத் துறை புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. கடந்த 10 ஆண்டு காலத்தில் போதைப்பொருள் குற்றங்களுக் காக கைதுசெய்யப்பட்ட பெண் களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. 2009ல் சிங் கப்பூரில் கைதுசெய்யப்பட்ட போதைப்புழங்கிகளில் 12% பெண்கள். இந்த விகிதம் 2018ல் 17% ஆகக் கூடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!