ஜோகூரில் கெலாங் பாத்தா நகருக்கு அருகில் உள்ள விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூரரான 42 வயது மோட்டார் சைக்கிளோட்டியின்
உடல் துண்டானது.
கெலாங் பாத்தாவிலிருந்து திரு சேவியர் லியாவ் சியாங் ஈ, தனது 'பிஎம்டபுள்யூ' மோட்டார் சைக்கிளில் ஜாலான் உலு சோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு சற்று முன்னால் சென்ற 'டோயோட்டா' வேன் வலது பக்கம் திரும்பியபோது, வேனின் இடப்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. அந்த மோதலின் விளை வாக சாலையில் நடுவே தூக்கி எறியப்பட்ட திரு சேவியரின் உடல் துண்டானது. அப்போது வானிலை நன்றாக இருந்தது என்றும் உடல் தூண்டானதற்கான காரணம் தெரியவில்லை என்றும் மலேசியப் போக்குவரத்து போலிஸ் கூறியது.
திரு சேவியரின் துண்டிக்கப்பட்ட உடல் ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோத னைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. தி நியூ பேப்பரிடம் பேசிய திரு சேவியரின் சகோதரி லியாவ் வை சின், குறிப் பாக தந்தையர் தினத்தன்று நிகழ்ந்த இந்த விபத்தால் எங் கள் குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளது," என்றார்.
வேன் ஓட்டுநரான 28 வயது மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் விபத்து குறித்த விசாரணை தொடங்கியுள்ளது என்றும் மலேசிய போலிஸ் கூறியது.

