அடுத்த ஆண்டு முதல் புதிய 'இஆர்பி' முறை

அடுத்த ஆண்டு முதல் புதிய 'இஆர்பி' முறை

2 mins read

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறையை (இஆர்பி) வாகனமோட் டிகள் எதிர்பார்க்கலாம்.

அதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'ஐயு' கரு விக்குப் பதிலாக நிலப் போக்கு வரத்து ஆணையம் 'ஆன்-போர்ட்' கருவிகளைப் (ஓபியு) பொருத்தும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்தக் கருவியின் முதலாவது மாற்றம் வாகன சோதனை நிலை யங்களிலும் நியமிக்கப்பட்ட வாகனப் பழுதுபார்ப்பு நிலையங்க ளிலும் இலவசமாகப் பொருத்திக் கொடுக்கப்படும்.

தற்போதுள்ள 'ஐயு' கருவியை விட புதிய 'ஓபியு' கருவி சற்று பெரிதாக இருக்கும் என்று அறியப் படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பயணத்துக் காக வாகனமோட்டி எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியி ருக்கும் என்று அக்கருவி காட்டும்.

பயணம் செய்யும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக் கும் இந்தப் புதிய முறை அறி முகப்படுத்தப்பட்டதும் தீவு முழுவ திலும் உள்ள 80க்கும் மேற்பட்ட 'இஆர்பி' நுழைவாயில்கள் அகற் றப்படும்.

புதிய முறைக்கு மாறும் இந்த நடவடிக்கை நடப்பில் இருக்கும் போது பழைய 'இஆர்பி' முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என் றும் ஆணையம் கூறியது.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மில் லியன் வாகனங்களில் புதிய 'ஓபியு' கருவி பொருத்தப்பட வேண்டியிருப்பதால், புதிய கட் டண முறைக்கு மாறுவதற்கு கிட் டத்தட்ட ஓராண்டு காலம் ஆகும்.

செயற்கைக்கோள் மற்றும் தெருக்களில் பொருத்தப்படும் சாதனங்கள் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் புதிய 'ஓபியு' கட்டண முறை தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகும் என்று கூறப்படுவதை ஆணையம் மறுத்தது.

தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றும் திட்டமிட் டபடி புதிய 'ஓபியு' கட்டண முறை அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.

2016ஆம் ஆண்டில் $556 மில்லியன் மதிப்புள்ள இந்தப் புதிய கட்டண முறை, 'என்சிஎஸ்-மிட்சுபி‌ஷி ஹெவி இன்டஸ்டிரிஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்றும் கொடுக்கப்பட்ட கால வரையறையை அதனால் கட்டிக் காக்க முடியவில்லை என்றும் தொழில்துறை தகவல்கள் கூறு கின்றன.