சிங்கப்பூரில் ரயில் சேவைகளை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் எஸ்டி இன்ஜினியரிங் குழுமத்து டன் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன் றில் கையெழுத்திட்டிருக்கின்றன.
இதன் மூலம் அந்த இரண்டு நிறுவனங்களும் முதல்முறையாக ஒன்று சேர்ந்து செயல்பட வழி ஏற்பட்டு இருக்கிறது.
ஹாம்ப்ஷியர் ரோட்டில் உள்ள நிலப் போக்குவரத்து ஆணைய அலுவலகத்தில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. அந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கலந்து கொண்டார்.
சிங்கப்பூரில் ரயில் தொழில் துறையை வளர்ப்பதற்கான உத்தி யின் ஒரு சிறு முன்னேற்றமாக இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு இடம்பெறுவதாக அமைச்சர் தெரி வித்தார்.
இந்தப் புரிந்துணர்வுக் குறிப் பின் மூலம் இம்மூன்று நிறுவனங் களும் சேர்ந்து செயல்பட்டு ரயில் துறை செயல்முறைகள் மற்றும் பராமரிப்புக்கான பொறியியல் ஆற் றல்களைச் சிக்கனமான முறையில் உருவாக்க முடியும் என்று அமைச் சர் குறிப்பிட்டார்.
பரஸ்பர நலனுக்கான கூட்டுத் திட்டங்களை அல்லது ஏற்பாடு களை இந்த மூன்று நிறுவனங் களும் அடையாளம் கண்டு அவற் றைத் தோற்றுவிக்கும் என்றார் அவர்.
வளங்கள் தேவையில்லாமல் வீணாவதைக் கூடுமான வரையில் தவிர்த்துக்கொள்வது இதன் இலக்கு என்று குறிப்பிட்ட அமைச் சர், உள்ளூர் தொழில்துறை எதிர் நோக்கக்கூடிய தொழில்நுட்பப் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு உத வும் என்றார்.
பழைய ரயில்களில் பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மின்னணுச் சாதனத்தைப் பழுதுபார்க்கும் பணிகளை இந்த மூன்று நிறுவனங்களும் முதலில் தொடங்கும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்தத் துறையில் வளங் களையும் அறிவையும் ஒன்று திரட் டிச் செயல்படுவதால் விரைவாக குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்றும் இதனால் ரயில் சேவை தடைபடுவது குறைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"2015 அக்டோபரில் போக்கு வரத்து அமைச்சில் சேர்ந்தேன். அது முதல் நாம் நெடுந்தொலைவு வந்திருக்கிறோம். முதல் இரண் டாண்டுகளில் தீயணைப்பு, சில நேரங்களில் வெள்ளத்தை கையாள வேண்டியிருந்தது. ஒரு நேரம் மின்னலையும் சமாளிக்கவேண்டி இருந்தது.
"இப்போது ரயில் சேவை நிலைப்பட்டு இருக்கிறது. நாம் நீண்டகால உத்திப் பிரச்சினை களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தலாம்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

