அதிக ஆதாயம் ஈட்டித் தரக்கூடிய முதலீட்டுத் திட்டத்திற்காக எனக் கூறி பணம் வசூலித்து 77 பேரை ஏமாற்றியுள்ளார் 53 வயது ஆடவர். இந்தச் சம்பவம் 2016, 2017ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது.
இதுகுறித்து 2017ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தகவல் கிடைத்ததாக போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இந்தச் சம்பவத்தில் பண மோசடி நடந்ததாகவும் $1,033,650 பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த ஆடவர், ஒரு பெண்ணை மானபங்கம் செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் நடந்துள்ளதாக அறியப்படுகிறது.
ஏமாற்றுக் குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
நம்பிக்கை மோசடி செய்ததற்காக ஏழு ஆண்டுகள் வரையிலான சிறையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மானபங்கம் செய்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறையோ, அபராதமோ, பிரம்படியோ அல்லது மூன்றுமோ விதிக்கப்படலாம்.

