தீர்வை செலுத்தப்படாத 3,000 பெட்டி சிகரெட் பறிமுதல்

தீர்வை செலுத்தப்படாத 3,000 பெட்டி சிகரெட் பறிமுதல்

1 mins read
a293f704-04d6-4861-9ba7-fcb8578b3822
தீர்வை செலுத்தப்படாத ஆயிரக்கணக்கான சிகரெட் பெட்டிகள் கடந்த சனிக்கிழமை பிடிபட்டன. படம்: குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஃபேஸ்புக் -

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தீர்வை செலுத்தப்படாத ஆயிரக்கணக்கான சிகரெட் பெட்டிகள் கடந்த சனிக்கிழமை பிடிபட்டன.

சிங்கப்பூருக்குள் நுழையவிருந்த மலேசிய லாரியில் 3,000 பெட்டி சிகரெட்டுகள் இருந்ததைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சரக்குகளின் 'ஸ்கேன்' பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருப்பதை அறிந்த அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் சுங்கத்துறை ஆணைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

லாரியை ஓட்டிவந்த 41 வயது ஆடவர் விசாரிக்கப்படுகிறார்.