பிடோக்கில் 10 வயது சிறுமியை மானபங்கம் செய்ததன்பேரில் 68 வயது ஆடவர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் 10 வயது சிறுமி மானபங்கம் செய்யப்பட்டதாக மாலை 3.50 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன் தொடர்பில் சந்தேகத்துக்குரிய 68 வயது ஆடவரை நேற்று பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சம்பவம் குறித்து நடத்திய விசாரணை மூலமாகவும் போலிஸ் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடனும் அந்த ஆடவரை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். 

அதற்குமுன், அந்த 10 வயது சிறுமியால் தம்மை மானபங்கம் செய்தவரை  அடையாளப்படுத்த முடியவில்லை. 

இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறையோ, அபராதமோ, பிரம்படியோ அல்லது அவற்றில் இரண்டோ அல்லது மூன்றுமோ தண்டனையாக விதிக்கப்படலாம். 

50 வயதுக்கும் மேலான ஆடவருக்குப் பிரம்படி தண்டனையாக விதிக்கப்படமுடியாது.