பத்து வயது சிறுமி மானபங்கம்; 68 வயது சந்தேக நபர் கைது

பத்து வயது சிறுமி மானபங்கம்; 68 வயது சந்தேக நபர் கைது

1 mins read

பத்து வயது சிறுமியை மானபங்கப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 68 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் பத்து வயது சிறுமியை அடையாளம் தெரியாத ஒருவர் மானபங்கப்படுத்தியதாக போலி சாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பிடோக் காவல் நிலைய அதிகாரிகள், காவல்துறை நிறுவியுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து சந்தேகநபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 68 வயது ஆடவர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.