முன்னாள் கார் விற்பனை அதிகாரிக்கு மூன்றாண்டு சிறை

முன்னாள் கார் விற்பனை அதிகாரிக்கு மூன்றாண்டு சிறை

1 mins read

சுபாரு கார்களை விநியோகிக்கும் 'மோட்டார் இமேஜ் சிங்கப்பூர்' நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் கார் விற்பனை அதிகாரியான டான் சே ஹியான், 44, தனது சூதாட்டத் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக நிறுவனத்தையும் வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி 400,000 வெள்ளி வரை சூறையாடினார். அவருக்கு நேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.