ஒரு மில்லியன் வெள்ளி மோசடி; ஆடவர் மீது 121 குற்றச்சாட்டுகள்

ஒரு மில்லியன் வெள்ளி மோசடி; ஆடவர் மீது 121 குற்றச்சாட்டுகள்

2 mins read

முதலீட்டு திட்டங்கள் மூலம் பலரை ஏமாற்றி அவர்களுக்கு ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் மீது நேற்று 121 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மரினா பே சாண்ட்ஸ் அறையில் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய மற்றொரு குற்றச்சாட்டை யும் அவர் எதிர்நோக்குகிறார்.

2016-2017ல் உயர்மட்ட முதலீட்டுத் திட்டங்களை நடத்திய சோங் வீ யிவ் ஏறக்குறைய 77 பேரை ஏமாற்றியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஏமாற்றியது, நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் மட்டு மல்லாமல் 2017ல் 28 வயது பெண்ணை அவர் பலமுறை மான பங்கப்படுத்தியாகவும் சொல்லப் படுகிறது.

மரினா பே சேண்ட்ஸ் அறையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் அந்தப் பெண்ணின் ஒப்புதல் இல் லாமல் அவர் தொடைகளை பிடித்து விட்டதாகவும் முன்னெற்றி யில் முத்தமிட்டதாகவும் இடுப்பை அணைத்துப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவரது பெயர் வெளியிடப்பட வில்லை.

தற்போது 200,000 வெள்ளி பிணையில் சோங் விடுவிக்கப்பட்டு உள்ளார். வரும் ஜூலை 9ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக அவருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் சோங்கும் ஒருவர்.

இரண்டாவது நபரான ஆலன் சீ கா போ, 43, மீது காசோலையில் தன்னுடைய பெயரையே எழுதி 22,000 வெள்ளிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

‌ஷி ஜியாபாவோ என்றும் அழைக்கப்படும் திரு சீ, 2015 டிசம்பர், 2016 மார்ச்சில் அந்தக் குற்றச்செயல்களை புரிந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகளையும் இரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார்.

லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபா நிலையத்தில் சில்லறைப் பொருட்களைத் திருடியது குற்றச்சாட்டுகளில் ஒன்று.

மூன்றாவது நபரான லியோங் வீ ஹியாங், 40, மீது 14,000 வெள்ளியை கையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வியட்நாமிய உணவகத்தில் அவர் கிளை நிர்வாகியாகப் பணியாற்றியபோது பணத்தை கையாடியதாகக் கூறப்படுகிறது.2019-06-19 06:00:00 +0800