எஸ்பிளனேட்டில் முப்பது மில் லியன் வெள்ளி செலவிலான நீர் முகப்பு அரங்கத்தை கட்டும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று நடைபெற்ற நில அகழ்வு நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்துகொண்டார்.
புதிய 550 இருக்கைகள் கொண்ட அரங்கம் வரும் 2021ஆம் ஆண்டில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய இடத்தில் நடைபெறும் காட்சிகளுக்கு அப்பால் கலை நிகழ்ச்சிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று கலைக் குழுக் கள் விரும்புகின்றன என்று நிகழ்ச்சியில் பேசிய கிரேஸ் ஃபூ கூறினார். தற்போது எஸ்பிள னேட்டில் உள்ள இரண்டு அரங்கங் களில் தலா 2,000 இருக்கைகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இருநூறு பார்வை யாளர்கள் அமரும் சிறிய அரங்க மும் இங்கு உள்ளது.
இந்த நிலையில் எஸ்பிளனேட் நீர்முகப்பில் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய அரங்கம் கட்டப் படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

