பொறியியல் துறை சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு உயிர்நாடி: டியோ

பொறியியல் துறை சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு உயிர்நாடி: டியோ

2 mins read
ef2a4f8c-ebce-4f80-982f-f5a3f1122af0
பொறியியல் துறையின் சிறப்புகளைக் காட்டும் 'ஃபியூச்சர் மேக்கர்ஸ்' கண்காட்சியின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் (வலம்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

அடுத்த கட்ட மேம்பாட்டில் அடி யெடுத்து வைத்துள்ள சிங்கப் பூருக்கு பொறியியல் துறை தொடர்ந்து உயிர்நாடியாக விளங் கும் என்று மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

அறிவியல் நிலையத்தில் பொறி யியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்த அவர் இதனை வலியுறுத் தினார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் உருமாற்றத்திற்கும் பொறியியல் முக்கிய பங்காற்றுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இளை யர்கள் பொறியியலை அல்லது விஞ்ஞானத்தை வாழ்க்கைத் தொழிலாக மேற்கொள்ள வேண் டும் என்று திரு டியோ கேட்டுக் கொண்டார்.

பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் புதிய நிறுவனங் களுக்கும் சிறந்த வசதிகளையும் சிறந்த ஆதரவையும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குவதால் எண் ணற்ற வாய்ப்புகள் இருப்பதாக வும் அவர் குறிப்பிட்டார்.

"நம்மைச் சுற்றிலும் பொறியியல் சாதனைகளைக் காண்கிறோம். 'நியூவாட்டர்' முதல் பொதுப்போக்கு வரத்துக் கட்டமைப்பு வரை, ஆர்ச் சர்ட் சாலையை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்டாம்ஃபோர்ட் நீர்த் தேக்கத் தொட்டி முதல் ஸ்டாம் ஃபோர்ட் மாற்றுப்பாதை கால்வாய் வரை, 2021ல் துவாஸில் திறக்கப் படவிருக்கும் மாபெரும் துறைமுகம் உட்பட பொறியியலின் சிறப்பு களை நாம் காண முடிகிறது," என்றார் அவர்.

சிங்கப்பூர் அறிவியல் நிலையத் தின் புரவலருமான திரு டியோ, அண்மையில் திறக்கப்பட்ட 'ஜூவல் சாங்கி ஏர்போர்ட்' பொறி யியலின் அதிசயம் என்றார்.

"ஜூவலின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிக் கும் பசுமைக்கும் இடையூறு ஏற் படாத வகையில் குறைவான தூண்கள் உத்திரங்களோடு மேற் கூரை வடிவமைக்கப்பட்டது. அதன் கண்ணாடிக் கூரையின் எடை மட்டும் சுமார் 3,500 டன். அதாவது, ஆறு 'ஏ380' ரக விமானங்களின் எடைக்கு ஈடானது. வளைவான உத்திரமும் கூரையோடு இணைப்பட்ட 14 தூண்களும் கண்ணாடி கூரை யைத் தாங்கி நிற்கின்றன. ஆனால் இந்தப்பொறியியல் நுணுக்கங்கள் கண்ணுக்குப் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனை வடிவமைத்த பொறி யாளர்களின் அறிவுக் கூர்மைக்கு நன்றி கூற வேண்டும்," என்று மூத்த அமைச்சர் டியோ சொன்னார்.