வர்த்தகத் துணை நிறுவனங்களை அமைப்பது போன்ற அறப்பணி அல்லாத நடவடிக்கைகளில் ஈடு படும் அறநிறுவனங்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகள் வழங் கப்படும் என்று 2018ஆம் ஆண்டின் வருடாந்திர அறிக்கை யில் அறநிறுவன ஆணையம் தெரிவித்திருந்தது.
"அத்தகைய நடவடிக்கைகள் அறப்பணி நிறுவனங்களின் கவனத்தைக் குறைக்கக்கூடிய வையாகவோ, பிரத்தியேக அறப்பணி நோக்கத்திலிருந்து கவனத்தைத் திருப்புவதாகவோ இருக்கக்கூடாது. சொந்த நலனுக் கும் கடமைக்கும் இடையேயான முரண்பாட்டு நிலையை கவனிக் காமல் விட்டுவிடுவது போன்ற வற்றில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்," என அறநிறுவன ஆணையர் டாக்டர் ஆங் ஹாக் செங் கூறியுள்ளார்.
அறப்பணி நிறுவனத்தின் பயனாளர்கள், சொத்துகள் போன் றவற்றைப் பாதுகாப்பதற்கான அதிகார வழிகாட்டிக் குறிப்புகளை ஆணையம் வழங்கும்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் வசூலான $2.68 பில்லியனைவிட 7.3% குறைவாக 2017ஆம் ஆண்டில் $2.65 பில்லியன் நன்கொடை வசூலாகி உள்ளது.
தேவாலயங்கள், கோயில்கள் போன்ற சமய அமைப்புகள் 2017ஆம் ஆண்டில் மொத்தம் $1 பில்லியன் நன்கொடை வசூலித் தன. சமுதாய, நலவாழ்வுத் துறை $445 மில்லியன், கல்வித் துறை $334 மில்லியன் நன்கொடையை வசூலித்துள்ளன. கடந்த ஆண் டின் இறுதியில் சிங்கப்பூரில் 2,277 அறப்பணி நிறுவனங்கள் பதிவுசெய்திருந்தன. 2017ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2,263ஆக இருந்தது.

