'புதிய இஆர்பி கருவிகள் இதுவல்ல; கருவிகள் இன்னும் முடிவாகவில்லை'

'புதிய இஆர்பி கருவிகள் இதுவல்ல; கருவிகள் இன்னும் முடிவாகவில்லை'

1 mins read
9b2ea3b3-6ccb-4ccd-a721-ae5c259027a1
படங்கள்: ROADS.SG / ஃபேஸ்புக் -

அடுத்த ஆண்டு அறிமுகமாகவிருக் கும் புதிய மின்னி யல் சாலைக் கட் டண (இஆர்பி) கருவிகள் என்று சமூக வலைத் தளங்களில் படங்கள் பரவி வருவது குறித்து கருத்துரைத்த நிலப் போக்குவரத்து ஆணையம், படங்களில் உள்ளவை புதிய 'ஓபியு' கருவிகள் அல்ல என்று மறுத்திருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் பரவும் போலியான படங்கள் பற்றி தனக்குத் தெரியும் என்று ஆணையம் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது.

"புதிய இஆர்பி கட்டண முறைக்கான கருவி சோதிக்கப் பட்டு வருகிறது. அதன் இறுதி வடிவம் இன்னும் உறுதியாக வில்லை," என்று ஆணையம் சொன்னது.

2016ஆம் ஆண்டு வெளியான புதிய இஆர்பிகருவி தொடர்பான மாதிரிப் படங்கள் அவை என்று கூறிய ஆணையம், அந்தப் படங்கள் பொதுமக்களிடம் வெளியிடப் படவில்லை என்றும் ஆனால் அவை எப்படி இணையத்தில் வெளியானது என்று தெரியவில்லை என்றும் விவரித்தது.

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறையை (இஆர்பி) வாகனமோட்டிகள் எதிர்பார்க்க லாம். அதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'ஐயு' கருவிக்குப் பதிலாக நிலப் போக்குவரத்து ஆணையம் 'ஆன்-போர்ட்' கருவிகளைப் (ஓபியு) பொருத்தும்.

இந்தக் கருவியின் முதலாவது மாற்றம் வாகனச் சோதனை நிலையங்களிலும் நியமிக்கப்பட்ட வாகனப் பழுதுபார்ப்பு நிலையங்களிலும் இலவசமாகப் பொருத்திக் கொடுக்கப்படும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று முன் தினம் செய்தி வெளியிட்டது.