சிங்பாஸைப் பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதால், அதை முழுமையாக சரிசெய்ய 'கவ்டெக்' எனும் சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு முயற்சியில் இறங்கியுள் ளது.
அரசாங்க அமைப்புகளின் சேவைகளைப் பயன்படுத்த சிங்பாஸ் மறைச்சொல் கட்டாயம்.
சிங்பாஸ் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதில் பயனா ளர்கள் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் 'கவ்டெக்' நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிற்பகல் 2.10 மணிக்குத் தகவல் தெரிவித்தது.
"எங்கள் குழுவினர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். உங்கள் பொறுமைக்கு நன்றி," என்று அந்தக் குறிப்பில் எழுதப்பட்டி ருந்தது.
சிங்பாஸ் முகப்புப் பக்கத்திலும் 'க்யூஆர்' குறியீட்டுக்குப் பக்கத்தில் "சிங்பாஸ் இப்போது செயல்பாட்டில் இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

