சிங்கப்பூரில் $768 மி. செலவில்  ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்

ஜெர்மனியின் ரசாயன பெருநிறுவ னமான இவோனிக் இன்டஸ்ட் டிரிஸ் சிங்கப்பூரில் $768 மில்லி யன் செலவில் தனது இரண்டாவது ஆலையை ஜூரோங் தீவில் திறந் துள்ளது.

விலங்குத் தீனியில் உள்ள முக்கிய புரதச்சத்தைத் தயாரிக்கும் ‘மெத்தியோனின்’ எனும் அமினோ அமிலத்தை இங்கு உருவாக்குவ தால், பொருளியலை வளர்க்க தொழில்துறை ஆற்றும் பங்கையும் அதன் மூலம் வேலைகள் உருவாக் கப்படுவதையும் இது எடுத்துக் காட்டுகிறது என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.

இவ்வட்டாரத்தில் மாமிசத்தின் தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில்கொண்டு, இவோனிக் கின் இரண்டாவது மெத்தியோ

னின் ஆலை சிங்கப்பூரில் அதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும்.

இந்நிறுவனத்தின் மொத்த வருடாந்திர உற்பத்தி 150,000 டன்னிலிருந்து 300,000 டன்னுக்கு உயரும். அது உலகம் முழுவதிலும் அது உறுபத்தி செய்யும் 730,000 டன்னில் 40% ஆகும்.

இவோனிக் நிறுவனத்துக்கு, சிங்கப்பூர் தவிர பெல்ஜியம், ஜெர் மனி, அமெரிக்கா ஆகிய நாடு களில் நான்கு ஆலைகள் உள்ளன. 

சிங்கப்பூரில் அதன் புதிய ஆலை நேற்று ஜூரோங் தீவில் தனது செயல்பாட்டைத் தொடங்கி யது. கெப்பிட்டல் அரங்கில் நேற்று நடைபெற்ற அதன் தொடக்க விழாவில் பேசிய திரு ஹெங், “பொருளியலை வளர்க்கும் அதேவேளையில் பொருளியல் வளர்ச்சி பெரும்பாலான ஊழியர்க ளுக்கு பலன்கள் அளிப்பதை உறுதி செய்வது சிக்கலான, சிரம மான முயற்சியாகும்.

“இந்த முயற்சியில் சில வளர்ந்த நாடுகள்கூட சிரமப்பட்ட துண்டு. அதன் காரணமாக, அந் தப் பொருளியலின் சமூக தாக்கம் பாதிக்கப்படலாம்,” என்றார். 

ஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்