குறைந்த நேரத்தில் அதிகம் கற்பிக்கும் ஆசிரியர்கள்

குறைந்த நேரத்தில் அதிகம் கற்பிக்கும் ஆசிரியர்கள்

2 mins read

சிங்கப்பூரில் ஆசிரியர்களின் வேலைச் சூழல் மேம்பட்டிருப்பதும் ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந் ததை ஒப்பிடும்போது கல்வியாளர் கள் வாரந்தோறும் குறைந்த அள விலான நேரம் பயிற்றுவிப்பதும் அனைத்துலக அளவிலான ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நிர்வாகப் பணிகளிலும் மதிப் பீடு செய்யும் பணிகளிலும் அவர் கள் செலவிடும் நேரம் குறைந்திருப் பதாகவும் அதனால் பயிற்றுவிப்ப தற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.

இருந்தாலும் அவர்கள் வாரத் துக்கு 46 மணி நேரம் பணிபுரி கின்றனர். ஆனால் வெளிநாடு களில் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 39 மணி நேரம் பணிபுரிவதுடன் சிங்கப்பூர் ஆசிரியர்களைவிட அதிக நேரம் வகுப்பறையில் செலவிடுவதாக 'டாலிஸ்' எனப்படும் கற்பித்தல் மற்றும் கற்றல் அனைத்துலக ஆய்வு தெரிவிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. நாடுகள் தங்களது பயிற்றுவிப்பு நிபுணத்துவக் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்கும் ஆசிரியர் கல்வி மற்றும் நிபுணத்துவ மேம் பாடு, வேலைப்பளு, பயிற்றுவிப்பு நடைமுறைகள் போன்றவை பற்றிய தகவல்களை அளிப்பதற்கும் இந்த ஆய்வு உதவுகிறது.

பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓஇசிடியின் இந்த ஆய்வில் உல கம் முழுவதிலுமிருந்து 260,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இரண்டாவது முறையாக சிங்கப்பூர் இந்த ஆய்வில் பங் கேற்றது. இங்குள்ள 157 உயர் நிலைப் பள்ளிகளிலிருந்து 3,300 ஆசிரியர்கள், 167 பள்ளி முதல்வர் கள் ஆகியோரும் 12 தனியார் பள்ளிகளும் இணையம் வழியாக கேள்விகளுக்கு பதிலளித்தன.

சிங்கப்பூரில் ஆசிரியர்கள் வாரத்துக்கு 18 மணி நேரத்தை கற்பித்தல், அறிக்கை எழுதுதல் போன்றவற்றில் செலவிடுகின்றனர். 2013ஆம் ஆண்டைவிட இது ஒரு மணி நேரம் அதிகம். ஆயினும் ஓஇசிடி ஆய்வின் சராசரியான 21 மணி நேரத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

நிர்வாகப் பணிகளில் ஆசிரியர் கள் ஈடுபடும் நேரம் 2013ஆம் ஆண்டில் இருந்த 5.3 மணி நேரத்திலிருந்து கடந்த ஆண்டு 3.8 மணி நேரமாகக் குறைந்துள் ளது. தேர்வுத்தாள் திருத்தும் நேர மும் 8.7லிருந்து 7.5ஆகக் குறைந் துள்ளது. ஆனால், நிர்வாகப் பணி, மதிப்பீடு ஆகியவற்றுக்கான ஓஇசிடி சராசரி நேரம் முறையே 2.7, 4.2 மணி நேரம் மட்டுமே.

சிங்கப்பூர் பள்ளிகளில் ஆசி ரியர்களின் அதிக அளவில் புத்தாக்க முறைகளைப் பயன் படுத்தி கற்பிப்பதையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இங்கு ஆசிரியர்களின் வேலைப்பளு இரண்டு மணி நேரம் குறைந்திருப்பதற்கு நிர்வாகப் பணிச்சுமை குறைந்தது முக்கிய காரணம் என கல்வித்துறை பொது இயக்குநர் வோங் சியூ ஹூங் நேற்று கூறினார்.

பலவிதமான மதிப்பீட்டு முறை களை ஆசிரியர்கள் தற்போது பின்பற்றுவதாக கல்வி அமைச்சின் நேற்றைய அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூர் ஆசிரியர்கள் மற்ற நாடுகளில் உள்ள ஆசிரியர்களை விட அதிகம் படித்தவர்களாகவும் நிபுணத்துவப் பயிற்சி பெற்றவர்க ளாகவும் இருப்பதாகக் கூறப் பட்டுள்ளது.