'பள்ளிகளில் நடுநிலை, பன்முகத்தன்மை முக்கியமானவை'

'பள்ளிகளில் நடுநிலை, பன்முகத்தன்மை முக்கியமானவை'

1 mins read

சிங்கப்பூரில் உள்ள ஏறத்தாழ அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறையில் நடுநிலை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் தொடர்பில் நேர்மறை நம்பிக்கை கொண்டிருப்பதாக பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓஇசிடியின் டாலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆய்வில் இம்முறை உலகம் முழுவதிலு மிருந்து 48 கல்வி அமைப்புகள் பங்கேற்றன.

பல்வேறு சமுதாய=பொருளி யல் பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பயில்வதை ஆசிரியர்கள் ஊக்கு விப்பதாகவும் மற்றவர்களின் கலாசாரங்களை மதிப்பதைப் பிள்ளைகள் இயன்றவரை இளம் வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கருது வதாகவும் சிங்கப்பூர் பள்ளி களைச் சேர்ந்த 99% பள்ளி முதல்வர்கள் குறிப்பிடுவதாக அறிக்கை தெரிவித்தது.

கலாசார பன்முகத்தன்மை தொடர்பான கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவை செயல்படுத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விகிதம் அதிகம் என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியது.

இன, கலாசார ரீதியான வேறு பாடுகளை எவ்வாறு கையாளுவது என சிங்கப்பூர் ஆசிரியர்களில் 95 விழுக்காட்டினர் கற்பிப்ப தாகவும் மற்ற நாடுகளில் அதனை 80% ஆசிரியர்கள் மட் டுமே கற்பிப்பதாகவும் ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.

சிறப்புத் தேவையுடைய பிள் ளைகளுக்குக் கற்பிப்பதற்கான பயிற்சியை சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பெற்றிருந்தாலும் குறைவான ஆசிரியர்களே அத்தகைய பிள்ளைகளுக்குக் கற்பிப்பதையும் அறிக்கை சுட்டியுள்ளது.