இரு இளையர்களுடன் சேர்ந்து லிட்டில் இந்தியாவில் உள்ள நகைக்கடைகளில் கதவை உடைத் துத் திருட முற்பட்டதாக 20 வயது சதிஷ் கௌதம் நேற்று நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
முகம்மது ஃபாரிஸ் முகம்மது ஃபட்ஸிர், 17, ஜமால் ரஸீன் அப்துல் கனி, 19 ஆகிய அவரது கூட்டாளிகள் இந்தக் குற்றச்சாட்டு களைக் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டனர். இருவரும் கடந்த ஆண்டு சீர்திருத்தப் பயிற்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
ஏற்கெனவே செய்திருந்த குற் றத்துக்காக சீர்திருத்தப் பயிற் சிக்கு அனுப்பப்பட்டிருந்த சதீஷ் கௌதம் அங்கிருந்து தப்பிய ஒரு வாரத்துக்குள் இந்தக் குற்றத்தை செய்ததாகக் கூறப்பட்டது.
நகைக்கடையில் கொள்ளை யடிக்க சதீஷுடன் சேர்ந்து ஜமால் திட்டம் தீட்டியதுடன் ஃபாரிசையும் உடன் சேர்த்துக்கொண்டார். 2018 மார்ச் மாதம் 11ஆம் தேதி அதி காலை இரண்டு மணியளவில் லிட்டில் இந்தியாவுக்கு அம்மூவரும் சென்றனர். ஜமாலும் ஃபாரிசும் யாரும் வருகிறார்களா என்பதை நோட்டம்விட்டபோது மெர்லின் கோல்ட்ஸ்மித் அண்ட் ஜுவல்லரி கடையின் பின்புறக் கதவை உடைத்துத் திறக்க முயற்சி செய்தார் சதீஷ்.
சதீஷை யாரோ பார்ப்பதை அறிந்து, அம்மூவரும் அவ்விடத் தைவிட்டு ஓடினர். மீண்டும் அன்று காலை லிட்டில் இந்தியா வுக்குச் சென்ற சதீஷும் ஃபாரிஷும் பஃப்ளோ ரோட்டில் இருக்கும் ஜுவல் பேலஸ் கடையின் முன்பக்க வாயிலுக்குச் சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. அங்கு எச்சரிக்கை மணி ஒலித்த தையடுத்து அவ்விருவரும் அங்கிருந்து அகன்றனர்.
கதவுகளை உடைக்க உலோ கத்தை அறுக்கும் ஒளிக் கருவி, சுத்தியல்கள், உளி, கையுறைகள், அசிட்டலின் வாயுத் தோம்பு போன்ற பொருட்களை சதீஷ் பயன் படுத்தியதாகக் கூறப்பட்டது.
சதீஷுக்கு மூன்றரை ஆண்டு கள் சிறைத்தண்டனை விதிக்கும் படி அரசுத்தரப்பில் வலியுறுத்தப் பட்டாலும் தனக்கு மீண்டுமொரு முறை சீர்திருத்தப் பயிற்சி ஆணை விதிக்கும்படி சதீஷ் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு அடுத்த மாதம் மூன்றாம் தேதி தொடரும்.

