வெஸ்ட் கோஸ்ட் பியரில் சிங்கப்பூருக்குள் நுழைந்த 50 வயது ஆடவர் 'ஐஸ்' என்று நம்பப்படும் பொருளை மூன்று பொட்டலங்களில் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். மெதாம்ஃபீடமைன் அல்லது 'ஐஸ்' என சந்தேகிக்கப்படும் பொருள் அந்த ஆடவரின் இடது காலணிக்குள்ளும் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான கருவி ஒன்று அவரது கால்சட்டைப் பைக்குள்ளும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் நேற்று குறிப்பிட்டது. சோதனையின்போது அந்த ஆடவர் திடீரென கீழே விழுந்ததையடுத்து அதிகாரிகளுக்கு சந்தேகம் முளைத்தது. மிகுந்த வயிற்றுவலி என்று குறிப்பிட்ட அந்த ஆடவர், உதவி வேண்டாம் என்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வைத்திருந்ததாக 50 வயது ஆடவர் கைது
1 mins read

