தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதையில் ஓட்டுநர்; விபத்துக்குள்ளான கார்

1 mins read

மதுவருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனமோட்டிய 38 வயது ஆடவரை போலிசார் விரட்டிப் பிடித்தனர். நேற்று அதிகாலை 12.06 மணியளவில் தீவு விரைவுச் சாலையில் யூனோஸ் வெளிவாயிலுக்கு முன்பாக துவாசை நோக்கி கார் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் செல்வதை போக்குவரத்து போலிசார் கண்டுபிடித்தனர். அதிகாரிகளின் கட்டளையை ஏற்க மறுத்த அந்த காரின் ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை வேகமாக ஓட்டினார். போலிசார் அதை விரட்டிச் சென்றனர்.

பெண்டமியர் ரோட்டுக்குச் செல்லும் வழியில் கேலாங் பாருவில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரத் தடுப்பில் ஏறி மரத்தின் மீது மோதியது. சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த வாகனமோட்டி சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.