பாகுபாடற்ற வாய்ப்புகள்

எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை எங்கே தொடங்கியிருந்தாலும் எத்தகைய பாகுபாடுகளுமின்றி அனைத்து மக்களும் தங்களது முழுத்திறன்களையும் அடைவது சிங்கப்பூரின் முக்கிய ஆளுமைக் கொள்கைகளில் ஒன்று என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) கூறியுள்ளர்.

ஆரம்பகாலக் கல்வியில் முதலீடு செய்வதிலிருந்து, வெற்றிக்குப் பல பாதைகளை உருவாக்குவது, சிங்கப்பூரர்கள் புதிய வேலைகளைச் செய்யவும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைந்து இருக்கவும் வாழ்நாள் கல்வியை நாட உதவுவது என பல வழிகளில் அரசு உதவுகிறது.

அதேநேரத்தில் மக்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் சமுதாயத்தை உருவாக்குவதில் சமூகத்துடன் இணைந்து அரசாங்கம் பணிபுரிகிறது என்றார் அவர்.

சமூக நல ஊழியர்களுடனும் தொண்டூழிய அமைப்புகளுடனும் இணைந்து சிறார்களுக்கும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கும் கொள்கைகளை வடிவமைத்துச் செயல்படுத்துவது அதில் ஒன்று. சிங்கப்பூரின் முக்கிய மூன்று ஆளுமைக் கொள்கைகளில் ஒன்றான மக்கள் தங்களது முழுமையான திறனை அடைய வகைசெய்வது சிங்கப்பூருக்கு நன்கு பயனளித்­துள்ளது என்றார் திரு ஹெங்.

பன்முகத்தன்மையில் வலிமை பெறுவது, எதிர்காலத் தலை­முறையினரைக் கருத்தில்கொண்டு நீண்ட கால நோக்கில் சிந்தித்துத் திட்ட­மிடுவது ஆகியவை மற்ற இரு கொள்கைகள் என்றார் அவர்.

எந்த இயற்கை வளமும் இல்லாத, தனது மக்களை மட்டுமே நம்பியுள்ள சிறிய தீவை சிறந்த ஆளுமையே வெற்றிபெறச் செய்­துள்ளது என்ற திரு ஹெங் எனினும், மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளது என்று சொன்னார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொதுநிர்வாகத்துக்கான நன்யாங் மையமும் பெல்ஜியத்தைச் சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான நிர்வாக அறிவியல் அனைத்துலக கல்விக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த நான்கு நாள் மாநாட்டில் திரு ஹெங் நேற்று முக்கிய உரை ஆற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!