லிங்கிட்இன்: திறனை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் ஊழியர்கள்

லிங்கிட்இன்: திறனை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் ஊழியர்கள்

1 mins read

உலகம் மின்னிலக்கமயமாக மாறிவரும் போக்குக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிங்கப்பூரில் பணிபுரியும் திறனாளர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வது அதிகரித்­துள்ளதாக 'லிங்கிட்இன்' திறனாளர்கள் பற்றிய தரவுக்கட்டமைப்பு இணையத் தளம் தெரிவித்துள்ளது.

காலத்திற்கேற்ப தேவையான முக்கிய துறைகளில் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறனாளர்களுக்கு ஆசிய பசிபிக் நாடுகளில் சிங்கப்பூரே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் லிங்கிட்இன் நிறுவனம் வெளியிட்­டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மின்னியல், தானியக்க பணிமுறை மற்றும், சிக்கலானவற்றுக்கு உடனடி தீர்வு காணும் அணுகுமுறை போன்ற மனப்போக்கைக் கொண்டிருத்தல் என சிங்கப்பூர் ஊழியர்களிடையே திறன்கள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று லிங்கிட்இன் தெரிவித்துள்ளது.

திறனாளர்கள் கட்டமைப்பைக் கொண்டுள்ள லிங்கிட்இன் இணையத்தளம், ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2018ஆம் தேதி வரையில் தனது கட்டமைப்பில் பதிந்துள்ள திறனாளர்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்­டுள்ளது.

தென்கொரியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவும் ஊழியர்கள் திறன் மேம்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளில் அதிகமாக சமூக ஊடக மூலம் சந்தைப்படுத்தல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் லிங்கிட்இன் தெரிவித்தது.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய ஐயாயிரம் பேரிடம் கருத்தாய்வு மேற்கொண்டது.