கார்களுக்கான சிஓஇ கட்டணம் 10% சரிந்தது

கார்களுக்கான சிஓஇ கட்டணம் 10% சரிந்தது

1 mins read

வாகன உரிமைச் சான்றிதழ் கட்­டணங்கள் (சிஓஇ) நேற்று வெளியிடப்பட்ட ஏலக் குத்தகை­யில் கார்களுக்கான 10 விழுக்காடு கட்டணம் குறைந்தது.

சிறிய கார்களுக்கான (1,600சிசி அல்லது 130பிஎச்பிக்கும் குறைந்த) சிஓஇ கட்டணம் $26,999 ஆகக் குறைந்தது.

இதற்கு முந்தைய ஏலக் குத்தகையில் இந்தக் கட்டணம் $30,009ஆக இருந்தது.

1600சிசிக்கும் மேற்பட்ட கார்களின் கட்டணம் $39,728ல் இருந்து $35,906 ஆகக் குறைந்தது.

மோட்டார் சைக்கிள்கள் தவிர்த்து மற்ற வாகனங்களுக்கான குறிப்பாக பெரிய கார்களுக்கான பொது சிஓஇ கட்டணம் $40,000ல் இருந்து 39,400ஆக குறைந்தது.