டெங்கி சோதனை அதிகாரிகளைத் தடுத்த 175 குடும்பங்களுக்குச் சட்ட அறிவிப்புக் கடிதங்கள்

டெங்கி சோதனை அதிகாரிகளைத் தடுத்த 175 குடும்பங்களுக்குச் சட்ட அறிவிப்புக் கடிதங்கள்

1 mins read
c29c8f0b-a5e7-49a4-a19f-e1979623d76b
-

டெங்கி சோதனைகளை நடத்துவதற்காக 2017ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டு மே மாதத்திற்கும் இடையே தங்கள் வீடுகளுக்கு வந்த தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளைத் தடுத்த குறைந்தது 175 குடும்பங்களுக்குச் சட்ட அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் வாசகர்களின் கேள்விகளுக்கு வாரியம் பதில் கடிதத்தை வெளியிட்டபோது இந்தத் தகவலை வெளியிட்டது. வாரியத்தின் கடிதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வாசகர் கருத்து பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டது.

வீட்டில் டெங்கி சோதனைகளை நடத்த வீட்டு உரிமையாளர்கள் மறுக்கும்போது அதிகாரிகள் என்ன செய்ய முடியும் என்பது குறித்து வாரியத்திடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வாரியம், வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை என்றால் சோதனைக்கான தேதியைத் தேர்ந்தெடுக்க அவருக்குக் கடிதம் அனுப்பப்படும் என்று தெரிவித்தது. அதற்குப் பிறகும் அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைய இயலாவிட்டால், பூச்சி மற்றும் பூச்சி மருந்து தொடர்பான சட்டத்தின்படி அவர்களுக்குச் சட்ட அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் என்று வாரியம் விளக்கியது. அதிகாரிகள் தாமாகவே வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்த இந்தச் சட்டம் வகை செய்வதாக வாரியம் கூறியது.