விளம்பரச் செலவு: மற்ற ஆசிய நாடுகளைவிட பின்தங்கிய சிங்கப்பூர்

சிங்கப்பூரின் விளம்பரச் செலவு மற்ற ஆசிய நாடுகளைவிட பின்தங்கியே இருக்கும் என்றும், 2019ல் 1% உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மெக்னா வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.வட அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆசிய பசிபிக் வட்டாரமே ஆகப்பெரிய விளம்பரச் சந்தையாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா (15%), இலங்கை (14%), பாகிஸ்தான் (15%), சீனா (10%), தைவான் (7%) ஆகியன விளம்பரச் செலவில் முன்னிலையில் உள்ளன.

சிங்கப்பூரின் விளம்பரச் செலவு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சரிவடைந்த பிறகு, 2019ல் 1.2% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளம்பரப் பொருளியலின் மொத்த மதிப்பு $2.2 பில்லியனாக இருக்கும் என்றும் மெக்னா கூறியது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகச் சரிந்துவரும் தொலைக்காட்சி விளம்பரங்கள் இவ்வாண்டு 2.0% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், 2004ஆம் ஆண்டின் உச்சத்தைவிட சிங்கப்பூரின் தொலைக்காட்சி விளம்பரச் செலவு 19% குறைவாகவே உள்ளது.

“தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தொடர்ந்து விலையை உயர்த்த முயற்சி செய்தபோதிலும், பார்வையாளர்கள் குறைந்துவருவதால் விளம்பரங்களும் குறைவதை ஈடுசெய்யுமளவுக்கு விலையை உயர்த்த இயலவில்லை,” என்று மெக்னா குறப்பிட்டது.

இதற்கிடையே, மின்னியல் விளம்பரங்கள் இவ்வாண்டு 21% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு ஆண்டாக இருப்பதால், அரசாங்கம் விளம்பரங்களுக்குக் கூடுதலாகச் செலவு செய்யும் என்று அறிக்கை தெரிவித்தது. இதனால் அச்சு, வானொலி விளம்பரங்கள் அதிகரித்தாலும், அச்சு விளம்பரங்கள் சென்ற ஆண்டைப்போலவே தொடர்ந்து சரியும், வானொலி விளம்பரங்கள் சென்ற ஆண்டைவிட 5% குறையும். இருநூற்றாண்டு விழா இல்லாவிட்டால், சரிவு மேலும் கடுமையாக இருக்கும்,” என்றது மெக்னா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!